ஒரு லீற்றர் பெற்றோலினால் 17 ரூபா நட்டம் ஏற்படுகிறது |

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
ஒரு லீற்றர் பெற்றோலினால் 17 ரூபா நட்டம் ஏற்படுகிறது |

எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால். 

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளொன்றுக்கு 365 கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை சந்திப்பதாகவும், எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறையை கையாளவேண்டி ஏற்படுமெனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளாா்.

 தற்போது விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் டீசலினால் 50 ரூபாவும், ஒரு லீற்றர் பெற்றோலினால் 17 ரூபாவும் எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.

 இந்த நிலைமையினால் நாளொன்றுக்கு 365 கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்துடன் கூட்டுத்தாபனத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று தெரிவிக்கும் அவர் எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதம், பஸ்கள் மற்றும் முப்படையினர், பொலிஸாா் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் பெற்றுக்கொடுக்கும் தீர்மானத்துக்கு செல்வதை தவிர வேறு மாற்றுவழி இல்லையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

 அடுத்த மாதமாகும்போது நிறுவனத்தில் பாரதூரமான நிதி நெருக்கடி ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ள அவர், எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலரை செலுத்துவதற்கான ரூபாவை சேகரிக்கவும் முடியாத நிலையை கூட்டுத்தாபனம் சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளாா். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/Nm71TFV
https://ift.tt/a3ymcJB

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.