13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் – சந்தேகத்தின் பேரில் பிக்கு ஒருவர் கைது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் – சந்தேகத்தின் பேரில் பிக்கு ஒருவர் கைது.

வட்டவளை – ரொசெல்ல பகுதியில் உள்ள விகாரையொன்றின் பிக்கு ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நேற்று (21) கைது செய்துள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தன்னை விகாரைக்கு அழைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுவன் தந்தையிடம் கூறியுள்ளான். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனை டிக்ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ அறிக்கையை பெறுவதற்கும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிக்குவை ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/mIz0jKk
https://ift.tt/deXQAsu

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.