ரஷ்ய தாக்குதலில் இதுவரை 137 பேர் பலி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
ரஷ்ய தாக்குதலில் இதுவரை 137 பேர் பலி

ரஷ்யா தாக்குதலால் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று நாம் 137 மாவீரர்களை இழந்துள்ளோம். அதில் எங்கள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்குவர் என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

ராணுவ நிலைகளை தாக்குவதாக கூறும் ரஷ்யா, உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள், அமைதியான நகரங்களை ராணுவ இலக்குகளாக மாற்றுகிறார்கள். 

இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்க முடியாதது என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான முழு ராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் ராணுவ அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

 ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 90 நாட்களுக்குள் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதற்கான நிதியை ஒதுக்குமாறும் உக்ரைன் அமைச்சரவையை ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

 ரஷ்ய படைகளிடமிருந்து இருந்து நாட்டைப் பாதுகாக்கத் அனைத்து மக்களும் முன்வர வேண்டும் என்றும் ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/zbS0JVy
https://ift.tt/ZtIVYE6

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.