போரில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
போரில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

“ரஷ்யாவுடனான போரை எதிர்கொள்ளும் நிலையில், உலக நாடுகள் எதுவும் உக்ரைனுக்கு உதவவில்லை. இதனால் ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டுள்ளது” என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

அதன்படி ,உக்ரைனின் பல நகரங்கள் மீது குண்டு வீசியும், தரைப்படையினருடன் நுழைந்தும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் நேற்று (வியாழக்கிழமை) இரவு உரையாற்றினார்.

 அப்போது பேசிய அவர், “ரஷ்யா பெரிய அளவில் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வல்லரசின் படையை எதிர்த்து உக்ரைன் தனித்துப் போரிட்டு வருகின்றது. ரஷ்ய படைகளை எதிர்கொள்வதில் உக்ரைன் தனித்து விடப்பட்டு விட்டது.

 உக்ரைனுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்கொள்ள யாராவது இருக்கிறார்களா என்றால், இல்லை என்பதுதான் பதில்” என்று உருக்காமாக கூறினார். இதற்கமைய நேட்டோவில் உக்ரைனை உறுப்பினராக்க யார் தயாராக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், உக்ரைனை ஆதரிப்பதாகக் கூறியவர்கள் அனைவரும் இப்போது அஞ்சுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

 ஜெலன்ஸ்கி பேசுகையில், “ரஷ்யாவின் தாக்குதலில் இதுவரை ராணுவத்தினர், பொதுமக்கள் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். ரஷ்ய படைகள் என்னையும் என் குடும்பத்தினரையும் முதல் எதிரியாக குறிவைத்துள்ளது. 

தலைநகர் கீவில்தான் தற்போதும் இருக்கிறது” எனக்கூறியுள்ளார். அதன்படி இதற்கிடையே, உக்ரைனில் இருந்து 18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 

ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அச்சத்தில் உறைந்துள்ள உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/ZW7KuMO
https://ift.tt/QK2NAMd

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.