மருந்துகளில் விலை மீண்டும் அதிகரிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மருந்துகளில் விலை மீண்டும் அதிகரிப்பு.

60 வகையான மருந்துகளின் விலைகளை மீண்டும் திருத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, குறித்த மருந்துகளின் விலைகள் 40% ஆல் அதிகரிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 375 மில்லி கிராம் அமோக்ஸிசிலின் கிளாவ்லினிக் அமில மாத்திரையின் விலை 59.79 ரூபாவிலிருந்து 83.71 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

250 மில்லி கிராம் குளோரித்ரோமைசின் மாத்திரையின் விலையும் ரூ.86.31 ஆக உயர்ந்துள்ளது. 100 மில்லிகிராம் டொக்சிசைக்ளின் மாத்திரையின் விலை 17.07 ரூபாவாக இருந்ததுடன், புதிய விலை 23.90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 மேலும், 75 மில்லி கிராம் எஸ்பிரின் மாத்திரையின் விலை ரூ.5.06ல் இருந்து ரூ.7.08 ஆக அதிகரித்துள்ளது. மெட்ஃபோர்மின் 500 மில்லிகிராம் மாத்திரையின் விலை 6.64 ரூபாவாக இருந்ததுடன், புதிய விலை 9.34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

10.29 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிராம் தைரொக்ஸின் மைக்ரோகிராம் மாத்திரையின் விலையும் 14.41 ரூபாவாக உயர்ந்துள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த மருந்துகளின் விலைகள் முன்னதாக மார்ச் 15 ஆம் திகதி 2241/43 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/GkYP2w0 https://ift.tt/zM0RwGW

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/r6pBMjA
https://ift.tt/zwS0KT1

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.