பயனுள்ள குறிப்புக்கள் பத்து.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
பயனுள்ள குறிப்புக்கள் பத்து.

1. பிறர் உங்கள் மனம் நோக பேசும் வார்த்தைகளை ஒருபோதும் நீங்கள் பிறரிடத்தில் பயன்படுத்தாதீர்கள். 2. பிறர் நிலையில் தான் நின்று, தான் இவர் இடத்தில் இருந்தால் எவ்வாறு நடந்து கொள்வேன் என அறிந்து செயலாற்றல் பல பிரச்சனைகளை தீர்க்க உதவும். 3. நீங்கள் எங்கு இருக்கின்றீர்களோ, பாடசாலையிலோ, வேலைத்தளத்திலோ, வெளியில் புதிய நபர்களுடனான சந்திப்பிலோ, உருவாக்குங்கள் அழகிய நினைவுகளை, ஏனெனில் பின்னொருகாலம் அவை பொக்கிச நினைவுகளாக, மகிழ்ச்சியாக வாழ்ந்த திருப்தியை ஏற்படுத்தும். 4. ஒருபோதும் உங்களை நீங்களே புகழ்ந்து தற்பெருமை பேசிடாதீர்கள். அதேபோல மற்றவர்கள் உங்களை புகழும் போது பணிவாக நடந்து கொள்ளுங்கள். 5. மகிழ்ச்சி என்பது நீங்கள் பயணிக்கும் நபர்களை பொறுத்தது அல்ல. உங்கள் எண்ணங்கள், செயல்களை பொறுத்தவை. எண்ணங்கள் அழகாக இருந்தால் உங்கள் செயல்கள் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை அளிக்கும். 6. முடிந்தளவு மற்றவரின் சிறிய செயல்களையும், நிறைகளையும் புகழ்ந்து கூறுங்கள். அது மற்றவரை மகிழ்விக்க, ஊக்கப்படுத்த உங்களால் முடிந்த ஒரு நல்ல செயல். 7. யாரையும் மட்டம் தட்டாதீர்கள். அனைவரையும் உயர்வாக கருதி மதிப்பளியுங்கள். 8. புறம் பேசாதீர்கள். ஒருவர் நம்பிக்கையாக கூறும் விடயங்களை பிறரிடம் பகிராதீர்கள். 9.உங்கள் கடமைகளை பிறர் தவறு கண்டுபிடிக்காத அளவிற்கு சரிவர ஆற்றிடுங்கள். 10. யாருக்காகவும் உங்களது நம்பிக்கைக்குரியவர்களை எவ்விடத்திலும் விட்டுக்கொடுக்காதீர்கள்.
https://ift.tt/U6OgxWe

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.