அரச பேருந்தின் நடத்துனரைத் தள்ளிவிட்டு, அவர் வைத்திருந்த 59 ஆயிரம் கொள்ளை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
அரச பேருந்தின் நடத்துனரைத் தள்ளிவிட்டு, அவர் வைத்திருந்த 59 ஆயிரம் கொள்ளை.


யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்துனரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

 யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்து 59 ஆயிரத்து 177 ரூபா பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மூவரும் யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்து உமையாள்புரம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.

 அவர்கள் இறங்குவதற்காக நடத்துனர் இடம்விட முற்பட்டபோது அவரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்த பணத்தினைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர். 

அவர்கள் இறங்கிய இடத்தில் வேறு சிலரும் காத்திருந்ததாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/T1sJMZk https://ift.tt/RDekqYU 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/PVG2ei7

 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 

👇👇👇 https://ift.tt/a9Pjsfl 

𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/waCEGMz
https://ift.tt/qQnOsRH

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.