படகு மூலம் அவுஸ்ரோலியா பிரயாணித்த 77 பேர் கைது!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
படகு மூலம் அவுஸ்ரோலியா பிரயாணித்த 77 பேர் கைது!


மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகில் சட்விரோதமாக பயணித்த 77 பேரை இன்று (11) அதிகாலை கைது செய்துள்ளதாகவும் இதில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணி அளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடல்பகுதியில் இயந்திரப்படகில் பயணித்த இயந்திரப்படகை கடற்படையின் படகுகள் சுற்றிவழைத்து கைப்பற்றினர் இதில் சட்விரோத குடியேற்றக்காரர்கள் 60 பேரை கைது செய்ததுடன் குறித்த சட்டவிரோத படகில் ஏறுவதற்கு களுவங்கேணி கடற்கரையில் வான் ஒன்றில் காத்திருந்த 17 பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து சுற்றிவழைத்து கைது செய்ததை அடுத்து 77 பேரையும் கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்ட 60 பேரையும் படகையும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதுடன் களுவங்கேணி கடற்கரையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 17 பேரையும் 14 அரை இலட்சம் ரூபாவையும் வான் ஒன்றையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நிருபர் சரவணன்

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/9NagvRO https://ift.tt/GK3MevU 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/LihIYkt 

𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/dJK82QC

 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/qkoaNSY
https://ift.tt/620MZdD

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.