பிச்சைக்காரர் வயிற்றில் இருந்த 187 நாணயங்கள்! தினமும் சாப்பிட்டு மகிழ்ந்ததாக அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் பிச்சைக்காரரின் வயிற்றில் இருந்து 187 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் லிங்காசுகரை சேர்ந்த தியாமப்பா ஹரிஜன் (58). இவர் பிச்சை எடுத்து வரும் நிலையில் திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

இதையடுத்து மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது வயிற்றுக்குள் 187 பண நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அறுவை சிகிச்சைகள் மூலம் நாணயங்கள் அகற்றப்பட்டது.

இது குறித்து மருத்துவர் ஈஷ்வர் கூறுகையில், பிச்சை எடுத்து கிடைக்கும் நாணயங்களை வாய்க்குள் போட்டு விழுங்கும் பழக்கம் தியாமப்பாவுக்கு இருந்திருக்கிறது.

அப்படி சாப்பிடுவதால் அது ஜீரணமாகும் என நினைத்திருக்கிறார்.

அவருக்கு schizophrenia எனப்படும் பிளவுபட்ட மனநோய் இருந்திருக்கிறது.

 நாணயங்களை சாப்பிட்டு தண்ணீர் குடிக்கும் போது ஒரு திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.

அனைத்து நாணயங்களை வயிற்றில் இருந்து எடுக்க 2 மணி நேரம் ஆனது என கூறியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.