2023 பட்ஜெட் வாக்கெடுப்பு இன்று. எதிர்த்து வாக்களிக்கும் கட்சிகள்?

 

பாராளுமன்றத்தில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (நவ.22) நடாத்தப்படவுள்ளது.

இதன்படி, இந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

❇️ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்

2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்றைய தினம் கூடிய போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

❇️ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு சார்பாக வாக்களிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.