ஒரு பந்து பரிமாற்றத்தில் 7 ஆறு ஓட்டங்கள் - ருதுராஜ் உலக சாதனை

புதிய உலக சாதனை ஒன்றை 2022ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரின் இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் நிகழ்த்தியுள்ளார்.

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று(28) இடம்பெற்ற போட்டியில், ஒரு பந்து பரிமாற்றத்தில்(over) 7 ஆறு ஓட்டங்களை அடித்ததன் மூலம்  இந்த சாதனையை படைத்துள்ளார்.

இத்தொடரில் மகாராஷ்டிரா அணி சார்பாக ருதுராஜ் விளையாடிவருகின்றார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உத்தரப் பிரதேச அணித்தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மகாராஷ்டிரா அணி 50 பந்து பரிமாற்ற நிறைவில் 5 ஆட்டமிழப்புகளுக்கு 330 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 220 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர் போட்டியின் இறுதி பந்து பரிமாற்றத்தில்(50ஆவது ஓவர்) தொடர்ச்சியாக 4 பந்துகளுக்கு 4 ஆறு ஓட்டங்களை விளாசினார்.

இதனையடுத்து, ஐந்தாவது பந்திலும் ருதுராஜ்  ஆறு ஓட்டம் ஒன்றை அடித்த போதிலும், அது செல்லுபடியற்ற பந்துவீச்சாக நடுவரால் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில்,  இறுதி இரண்டு பந்துகளிலும் இரண்டு ஆறு ஓட்டங்களை அடித்தார் ருதுராஜ்.

இதன்படி, ஒரே ஓவரில் 7 ஆறு ஓட்டங்களை பெற்றதுடன், ஒரு ஓவரில் அணிக்காக 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு  பந்து பரிமாற்றத்தில் ஏழு  ஆறு ஓட்டங்கள் பெறப்பட்டமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.