முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் தோல்வி.

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை முச்சக்கரவண்டிப் பதிவுக்காக கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதால், பல முச்சக்கரவண்டி சாரதிகள் அதற்கு ஆதரவளிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சுதில் ஜயருக் குறிப்பிட்டார்.

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக, அண்மையில் பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் உரிய பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், பதிவு செய்ததன் பின்னர் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 10 லீற்றராக அதிகரிக்கப்படும்.

பதிவுக் கட்டணம் அறவிடுவதற்கு மாகாண சபை தீர்மானித்துள்ளதால், முச்சக்கரவண்டி சாரதிகள் இந்த வேலைத்திட்டத்தில் இணைய மறுத்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

இது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவவிடம் "அத தெரண" வினவியது.

முச்சக்கர வண்டி பதிவுக் கட்டணம் அடுத்த வருடம் முதல் அறவிடப்படும் என பிரசன்ன சஞ்சீவ குறிப்பிட்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.