நாமும் பலி கொடுப்போம்.

தலையை வெட்டினால் தான் பலி என்பதல்ல நாம் அன்றாடம் நம் சுயநலத்துக்காக எத்தனை பேரின் மகிழ்ச்சியைப் பலி கொடுகின்றோம் என்று கவனித்துப் பாருங்கள்..

கோபம்,காழ்ப்பு, விரோதம் போன்ற நம் வீண் அகங்காரங்களை நாமும் பலி கொடுப்போம்.

ஒரு பலி கொடுக்கும் தீவிரத்தோடு, உங்கள் உயிர்ச் சக்தியை முழுமையாக செயல்களில் செலுத்தி அதில் ஈடுபடுங்கள்.

ராமகிருஷ்ணன பரமஹம்சரின் வார்த்தைகள் மீது ஒருவன் மிகுந்த மரியாதை வைத்து இருந்தான். அவனது படுக்கையில் ஏராளமான மூட்டைப் பூச்சிகள் இருந்தன.

”மனித உயிர்,மற்ற உயிர் என்று பிரிக்காமல், எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கும்படி ராமகிருஷ்ணா அடுக்கடி சொல்வாரே,

தொந்தரவு செய்யும் இந்த மூட்டைப் பூச்சிகளை எப்படிக் கொல்வது என்று அவன் குழம்பிப் போனான்.

தினமும் தூக்கம் பறி போயிற்று.

குருவிடமே கேட்கலாம் என்று உறக்க மிகுந்த களைப்புடன் அவரைத் தேடி  வந்தான்..

அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கு திகைப்பூட்டியது.

ராமகிருஷ்ணர் தன் பாயில் அமர்ந்து இருந்தார். அதிலிருந்த ஒவ்வொரு மூட்டைப்பூச்சியாக எடுத்து நசுக்கிக் கொண்டு இருந்தார்.

எந்த உயிரையும் காழ்ப்போ, விரோதமோ, வெறியோ இல்லாமல் கையாளும் வரை அதில் தவறில்லை என்பதை ராமகிருஷ்ணர் தன் செயல் மூலம் அவனுக்கு தெளிவுபடுத்தினார்..

ஆம்.,நண்பர்களே.,

ஆடு , மாடுகளுக்கு உணவு தாவரம்..

சிங்கம் , புலிகளுக்கு உணவு ஆடு , மாடுகள் ..

ஒன்று அழிந்தால் தான் ஒன்று இந்தப் புவியில் வாழ முடியும் , 

இதுதான் இயற்கையின் நியதி ..

இருந்தாலும் உயிர்ப் பலிகளை நாம் நிறுத்துவோம்

அனைத்து உயிர்களிடம் அன்பு செலுத்துவோம் ,                                         

உடுமலை சு.தண்டபாணி.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.