செல்லக்கதிர்காம பிரதேச மக்களுக்கு விசேட அறிவிப்பு!

மொணராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் தலா ஒன்றரை அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளது.

வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, மெனிக் ஆற்றின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கதிர்காமம், செல்லக்கதிர்காம பிரதேச மக்களையும், மெனிக் ஆற்றை பயன்படுத்தும் பக்தர்களையும் அவதானமாக செயல்படுமாறு மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்தால், வெஹெரகல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை மேலும் திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என மொணராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.