வாட்ஸ்அப்பில் இருக்கும் சில மிரட்டலான ட்ரிக்ஸ்!

வாட்ஸ்அப்பில் இப்படியும் சில ட்ரிக்ஸ் இருக்கிறதா என ஆச்சரியமான அம்சங்களை இங்கே அதை அறிந்து கொள்ளுங்கள்.

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி எண்ணற்ற அம்சங்களை நமக்கு வழங்குகிறது. 

வீடியோ மற்றும் ஆடியோ கால்ஸ்களை மேற்கொள்வது, பணம் செலுத்துவது, லொக்கேஷன் ஷேர் செய்வது, புகைப்படம், வீடியோ மற்றும் டாக்குமென்ட்ஸ்களை பகிர்வது மற்றும் 24 மணிநேரம் வரை நீடிக்கும் ஸ்டேட்டஸ்களை வைக்க அனுமதிப்பது உள்ளிட்ட பல அம்சங்களை வழங்குகிறது.

வாட்ஸ்அப் ஆன்லைன் ஸ்டேட்டஸ் மற்றும் மெசேஜ் டெலிவரி ரிப்போர்ட்களை மறைக்க அனுமதிக்கிறது. நம்முடைய கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் சிலர் நம்முடைய Whatsapp Status-ஐ பார்க்க கூடாது என்று நினைத்தால் அவர்களை மட்டும் Hide செய்து விட்டு பிறர் பார்க்கும்படி status-ஐ வைக்கலாம்.

ஆனால் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்களின் status-ஐ நீங்கள் பார்த்தால் அவர்களுக்கு நீங்கள் பார்ப்பது தெரிய கூடாது என்று நினைக்கிறீர்களா.? அதாவது அவர்கள் வைக்கும் வைக்கும் status-ஐ நீங்கள் ரகசியமாக பார்க்க நினைக்கிறீர்களா.? இதற்கான வாய்ப்பு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா..?

01. Read Receipts-ஐ Off செய்து வைக்கலாம்:

Whatsapp-ஐ பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூஸர்கள் வாட்ஸ்அப்பில் தாங்கள் பெறும் மெசேஜ்களுக்கான Read receipts முடக்கலாம். 

மற்றவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நீங்கள் பார்க்கும் போது வியூவர்ஸ் ஹிஸ்ட்ரியில் உங்கள் பெயர் தெரியாது என்பதை உறுதி செய்யும். 

முதலில் உங்கள் மொபைல் ஃபோனில் வாட்ஸ்அப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள். மேலே வலது மூலையில் இருக்கும் 3 புள்ளிகளை டேப் செய்து கடைசியாக இருக்கும் Settings-க்கு செல்லுங்கள். அங்கே காணப்படும் ஆன்-ல் இருக்கும் Read Receipts என்ற ஆப்ஷனை Off செய்யவும்.

02. ஆஃப்லைனில் ஸ்டேட்டஸை பார்க்கலாம்

ஒருவரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பதற்கான மற்றொரு வழி, நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும் அதை செய்வது. 

உங்கள் நண்பர் அல்லது உறவினர் அவர்களின் ஸ்டேட்டஸை அப்டேட் செய்யும் போது டக்கென்று உங்கள் மொபைல் டேட்டா அல்லது வைஃபை கனெக்ஷனை ஆஃப் செய்யவும்.

இதன் மூலம் அவர்களது அப்டேட்டட் ஸ்டேட்டஸ் உங்கள் டிவைஸில் cache-ஆகி இருக்கும், இதன் மூலம் அவர்களுக்குத் தெரியாமல் நீங்கள் அவர்களின் ஸ்டேட்டஸை பார்க்க முடியும்.

நீங்கள் டெஸ்க்டாப்-ல் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர் என்றால் பிரவுசரில் இருக்கும் New incognito window-வை ஓபன் செய்வதன் மூலம் incognito mode-க்கு செல்லுங்கள். 

பின்னர் வழக்கம் போல வாட்ஸ்அப் வெப் சென்று QR கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுன்டிற்குள் செல்லுங்கள். பின் ஸ்டேட்டஸ் ஐகானை கிளிக் செய்து நீங்கள் பார்க்க விரும்பும் நபரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவருக்கே தெரியாமல் பார்க்கலாம். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.