சிறுவனின் வாய்க்கு துப்பாக்கி சூடு – ஒருவர் கைது.

கொழும்பு – கிரான்பாஸ் – நவகம்புர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

”மன்ன கண்ணா” என்றழைக்கப்படும் பாதாள உலக உறுப்பினர் ஒருவர் மீதே, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர், பாதாள உலக குழுவின் உறுப்பினரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கிரான்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.