தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கும் அரசாங்கம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பாக அரசாங்கத்திற்குள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலை ஒத்திவைத்து, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என அமைச்சர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், அவற்றின் நிர்வாகம் விசேட ஆணையாளர் அல்லது பிரதேச செயலாளருக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் தேர்தலை ஒத்திவைப்பது சம்பந்தமான அரசாங்கம் இதுவரை இறுதி முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை.

கடந்த 2028 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அமைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

அவற்றின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளை நிறுவ வேண்டும்.

அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், அதற்கு எதிராக வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.