ஐந்து மாதங்களுக்கு மஹவயில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் போக்குவரத்து இல்லை.

மஹவ முதல் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் போக்குவரத்து ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பழுதடைந்த புகையிரத பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதன்படி 2023 ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவயில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

புகையிரத போக்குவரத்து முழுவதும் தொடர்வதாகவும் எனினும் புகையிரத பாதை பாழடைந்துள்ளதாகவும் பயணத்தை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

5 மாதங்களுக்குள் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.