உலகக்கோப்பைத் தொடரில் ரொனால்டோவின் புதிய சாதனை!

ஐந்து உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.  

கானா அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி களமிறங்கியது.

இந்தப் போட்டியில் 65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து போர்ச்சுகல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.  

அதுமட்டுமல்லாமல் இந்த கோலை அடித்ததன் மூலம் 5 வெவ்வேறு உலகக்கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

2006ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் ரொனால்டோ, 2006ல் ஒரு கோல், 2010ல் ஒரு கோல், 2014ல் 1 கோல், 2018ல் 4 கோல் என மொத்தம் 7 கோல்கள் அடித்திருந்தார்.

தற்போது நடப்பு உலகக்கோப்பையில் கோல் அடித்ததன் மூலம் 5வது உலகக்கோப்பையில் கோல் அடித்து அசத்தியுள்ளார்.

இதுவரை மெஸ்ஸி, பீலே, உவே சீலர், மிரோஸ்லாவ் க்ளோஸ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் 4 உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்து சாதித்திருந்தனர்.

தற்போது அனைவரின் சாதனையையும் முறியடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனையை படைத்துள்ளார்.

அதேபோல் போர்ச்சுகல் அணியை பொறுத்தவரை புகழ்பெற்ற வீரர் யூசிபியோ உலகக்கோப்பை தொடரில் 9 கோல்கள் அடித்ததே அதிகபட்ச சாதனையாக இருக்கிறது.

இதனை முறியடிக்க, ரொனால்டோவுக்கு இன்னும் இரண்டு கோல் தேவைப்படுகிறது. இந்த கத்தார் உலகக்கோப்பை தொடரிலேயே அதனை ரொனால்டோ முறியடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில், ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை என்று  ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகின்றது.

காரணம் 37 வயதாகும் ரொனால்டோ, அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச கால்பந்து தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேற்றம்,  தொலைபேசி சர்ச்சை, ஒப்பந்தம் இல்லாத நட்சத்திர வீரர், ஆட்டத்தில் பின்னடைவு என்று ரொனால்டோ மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இரண்டு உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.