இலங்கையில் இருந்து நாளை முதலாவது ஏற்றுமதி!

இலங்கையில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புளிப்பு வாழைப்பழத்தின் முதல் தொகுதி நாளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ராஜாங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்படும் புளிப்பு வாழை முதன்முறையாக வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தொகுதியாக 12,500 கிலோ புளிப்பு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் , இனிமேல் வாரந்தோறும் சனிக்கிழமை துபாய் சந்தைக்கு இலங்கை புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் வாரத்திற்கு 10,000 டொலர் வருமானத்தை நாட்டுக்கு வழங்கியுள்ளதாகவும் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்தார்.

அதேவேளை அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் இலங்கையின் பெயரை சர்வதேசப் புகழுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.