உதவிக்கரம் நீட்டுவோம்.

நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதாதா...?

எதற்காக மற்றொருவருக்கு உதவி செய்ய வேண்டும்...?

பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம்...?

நாமும் நம் குடும்பமும் நலமாக இருந்தால் போதும் என்றே பலரும் கருதுகின்றனர்...!

இம்மண்ணில் வாழும் மானிடப் பிறவிகள் அனைவரும் மற்றொருவரைச் சார்ந்தே வாழ வேண்டும், இதில் எவரும் விதிவிலக்கு அல்ல...

நமக்கு மரம் உதவுகிறது நிழல் கொடுத்து…

புல்லாங்குழல் உதவுகிறது இசைக்குத் தன்னுயிர் கொடுத்து...

ஏணி கூட உதவுகிறது நம்மை உயரத்தில் ஏற்றி விட...

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்வது மனித இயல்பு, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழும் இயல்பே குடும்ப வாழ்க்கையாக உருவாகியுள்ளது...

இந்த உதவும் மனப்பான்மையானது குடும்ப வாழ்க்கையைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக நிலைத்திருக்க வேண்டும்...

ஆனால்! இன்றைய காலகட்டத்தில் உதவ வேண்டிய நேரத்தில், சிலர் மனிதாபிமானம் இல்லாமல் பணத்தை மட்டுமே பெரிதாகக் கருதுகிறார்கள்..

ஆயினும், ஒரு சிலர் சகோதரத்துவத்தோடு உதவி செய்பவர்களால் தான் இன்னமும் மனிதகுலம் உயிரோடு வாழ்கிறது...

மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். 

ஏனெனில், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். எனவே, உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும்....

பிறர்க்கு உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள் வீணாகத் தான் அழியும்...

ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக 

வாழ்வதில்லை. எனவே மனிதன் வாழும் காலத்திலேயே, தான் சேர்த்த அளவுக்கு அதிகமான பொருட்களை பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும்...

ஆம் நண்பர்களே...!

நம்மை நாடி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு இயன்றளவு உதவி செய்து வாழ்வது தான் நல்ல வாழ்க்கை...

அதுதான் உங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும்...!

அடுத்தவர் வாழ்விலும் ஒளியேற்றி வைக்கும்...!!

இயன்றளவு பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்...!!!

அடுத்தவருக்கு உதவி செய்தால் பின்னால் அது உங்களுக்கே திரும்பக் கிடைக்கும். நாம் செய்தது நமக்கே திரும்பி வரும் என்பது தான் இப்பேரண்டத்தின் விதி...!

இயன்றளவு  உதவுவோம்...!

இல்லாதவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்...!!

இயலுமாயின் இறுதிவரை அவர்களின் கண்ணீரைத் துடைப்போம்...!!!

உடுமலை சு. தண்டபாணி

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.