பாதாமை சாப்பிட இதுவே சிறந்த நேரம்!

பாதாமில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.

இதனை தினமும் எடுத்து கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு அள்ளித் தருகின்றது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக எடையை குறைக்க உதவுகின்றது. பாதாமை எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வோம். தினமும் உணவில் பாதாமை சேர்க்கும் போது மிகக் குறைந்த கலோரியில் அதிக ஊட்டச்சத்துக்களும் பசியைக் கட்டுப்படுத்துகிற நார்ச்சத்துக்களும் அதிகமாக கிடைக்கின்றன.

அதனால் ஏற்கனவே உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட்டு கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் மிக வேகமாக எடையைக் குறைக்க முடிகிறது. பச்சையாகவோ அல்லது வறுத்த பாதாமையோ சாப்பிடலாம்.

ஒரு நாளைக்கு 20 - 25 பாதாம் வரையிலும் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். இரவு முழுவதும் பாதாம் ஊறவைத்து சாப்பிடலாம். இது போதிய ஆற்றலை தரும். எடையும் ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும்.

பாதாமை பொடி செய்து இதனை தினசரி ஓட்ஸ் போன்ற கஞ்சிகளில் அல்லது நீங்கள் மிக விரும்பி சாப்பிடும் தோசை, இட்லி, ரொட்டி போன்றவற்றை செய்யும் போது அந்த மாவுடன் பாதாம் பொடியையும் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.

பாதாமை ஊறவைத்து அரைத்து பால் எடுக்க வேண்டும். இதை அப்படியே குடிக்கவோ அல்லது ஸ்மூத்திகள் செய்யும்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

📌 பாதாம் சாப்பிட சிறந்த நேரம் எது?

முதல் நாள் இரவே 10 பாதாமை தண்ணீரில் ஊறவைத்து விட்டு அதை காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். உணவு இடைவெளிகளுக்கு நடுவில் லேசாக பசியெடுக்கும். அந்த சமயம் பாதம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் ஆகும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.