பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் பல்கலைக்கழக மாணவிகள்!

இலங்கை போதைப் பொருளை பரவலை கட்டுப்படுத்த சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள சட்டங்களை இலங்கைக்கு ஏற்ற வகையில் உருவாக்கி நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாக மாறியுள்ள மாணவர் சங்கங்கள் நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களில் இயங்கி வருகின்றன.சிலர் பல வருடங்களாக பல்லைக்கழக மாணவர்கள் என காட்டிக்கொண்டு, புதிய மாணவர்களை பகிடிவதை செய்து வருகின்றனர்.

சில பல்கலைக்கழங்களில் மாணவிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகங்கள் கூட நடக்கின்றன. இந்த நிலைமையை நிறுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தற்போது பாடசாலை ஆசிரியர் சங்கங்கள் ஊடாக பாடசாலை மாணவர்களும் மாணவர் சங்கத்தினராக செயற்பட்டு வருகின்றனர்.

நாட்டில் இருக்கும் மிக சிறந்த மாணவர்களே பல்கலைக்கழங்களுக்கு செல்கின்றனர். இவர்கள் கல்வி கற்றப்பின்னர் நாட்டுக்கு உரிய பலன் கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறி. கடந்த காலங்களில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு எவ்வித நேர்முக தேர்வும் நடத்தாது நாங்கள் தொழில் வாய்ப்புகளை வழங்கினோம்.

இவர்கள் மூலம் நாட்டுக்கான சேவை சரியான முறையில் கிடைக்கின்றதா என்பதை கண்டறிய வேண்டும். நாட்டில் ஹெரோயின் போதைப் பொருள் மாத்திரமின்றி வேறு போதைப் பொருள்களும் பெரியளவில் இளைஞர் மத்தியில் பரவியுள்ளது.

அவை பாடசாலைகளுக்கும் வந்துள்ளன. பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மாத்தளை மாவட்டத்தில் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றோம்.

சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது எனவும் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.