வெளிநாட்டு இனிப்புகள் தொடர்பில் முறைப்பாடு.

வௌிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் (Toffee) தரத்தை பரிசோதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

உரிய முறையை பின்பற்றாது கொண்டுவரப்படும் இனிப்பு பண்டங்களின் தரம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொள்கலன்களில் இவை நாட்டிற்கு கொண்டுவரப்படுவதில்லை என்பதால், துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த இனிப்பு வகைகள் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே இவ்வாறான இனிப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகளைப் பெற்று, அவற்றின் தரம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.