WhatsApp-ல் வர இருக்கும் புதிய அம்சம்

WhatsApp செயலியில் தினமும் பயனாளிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் உங்களின் call history-ஐ எளிமையான முறையில் சரிபார்ப்பதற்கு புதிய அம்சத்தை கொண்டு வர இருப்பதாக இந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

❇️ WhatsApp செயலி

உலகம் முழுவதும் WhatsApp செயலியை பில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். 

மேலும் WhatsApp செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது வசதிகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. 

மேலும் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனால் நாளுக்கு நாள் இச்செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் WaBetaInfo ஆனது WhatsApp-இல் புதியதாக வரவிருக்கும் அம்சங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, Desktop app வாயிலாக WhatsApp-ல் நீங்கள் மேற்கொண்ட அழைப்புகளை சரிபார்ப்பதற்கான வசதிகள் கொண்டு வர உள்ளது. இந்த புதிய அம்சம் மூலமாக நீங்கள் சுலபமாக call history-ஐ சரிபார்த்து கொள்ளலாம்.

மேலும் இது போன்று மற்றொரு அம்சத்தை கொண்டு வர உள்ளது. அதாவது WhatsApp-ல் ‘Screen Lock’ என்ற புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளது. இதில் பயனாளர் WhatsApp-ஐ திறக்கும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கான கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகே WhatsApp-க்குள் நுழைய முடியும். இதனால் உங்களின் WhatsApp-ஐ உங்களின் அனுமதியின்றி யாராலும் பயன்படுத்த முடியாது. 

இந்த அம்சத்தை விரைவில் கொண்டு வர இருப்பதாக இந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.