இலங்கையில் நாளொன்றுக்கு 110 பேர் பலி.

புகையிலை மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு 110 பேர் உயிரிழப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனை புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புகைபிடித்தல் மற்றும் புகையிலை பாவனையால் வருடாந்தம் 40,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்த அவர் இதனால் இறப்பவர்களின் மனைவிகள், பெற்றோர்கள், பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட புகையிலை வரிச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தினால், இறப்பு எண்ணிக்கையை குறைத்து, அரசாங்கத்திற்கு தேவையான 11 பில்லியன் ரூபாவை சம்பாதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார் .

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.