நடிகை மீனாவுக்கு 2வது திருமணமா? மாப்பிள்ளை இவர் தானா? - வைரலாக பரவும் தகவல்

நடிகை மீனா 2வது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரத்திற்கு பிறகு நடிகையாக தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். தென்னிந்திய சினிமா உலகின் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

மீனா தமிழில் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜுன், அஜித், முரளி, சத்யராஜ், சரத்குமார், பாக்யராஜ் என பலருடன் நடித்துள்ளார்.

மீனாவுக்கு மறுமணமா?

மீனா கடைசியாக மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரின் உயிரிழப்பால் மீனா சோகத்தில் இருந்து வந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை மீனாவின் 2வது திருமணம் (மறுமணம்) குறித்தான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மீனாவிற்க்கு விருப்பம் இல்லை என்றாலும் பெற்றோர்களின் கட்டாயத்தால் மறுமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் குடும்ப நண்பரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது. இதற்கு மீனா தரப்பில் இந்த செய்தி வதந்தி என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.    

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.