ஏறாவூரில் மின்னல் தாக்கி 27 உயிர்கள் பலி.

இன்று  அதிகாலை 02.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய இடி மின்னல் தாக்கத்தினால் ஏறாவூர், றஹ்மானியா பாடசாலை வீதி, எட்டாம் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் ஆட்டுக்காளை கருகி சாம்பலாகியுள்ளது.

கூலித் தொழிலாளியான இஸ்மாயில் அன்வர் என்பவர் தனது வீட்டிலேயே காளை அமைத்து, ஆடு, கோழி மற்றும் வாத்து என்பவற்றை வளர்த்து வந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நேற்று மாலையிலிருந்து பாரிய இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய இடிமின்னலினால் சகோதரர் அன்வரின் 09 ஆடுகள், 11 பேட்டுக் கோழிகள், 04 சேவல்கள், 03 வாத்துக்கள் என்பவையே கருகி சாம்பலாகியுள்ளது.

இரு தட்டுக்களை கொண்ட காளையில் மேல் பகுதியில் ஆடுகளும், கீழ் பகுதியில் கோழிகளும் வாத்துக்களும் தங்கியிருந்த நிலையில்தான் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.