மூன்று பகுதிகளில் இருந்து 3 பேர் சடலங்களாக மீட்பு.

உஹன மற்றும் பேராதனை பிரதேசங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உஹன தேரதுர பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு (27) கண்டெடுக்கப்பட்டதுடன், அவர் அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

பேராதனை, இலுக்குனுவ பிரதேசத்தில் வயலில் 64 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி-கரடிபொக்கு பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 40 முதல் 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன, பேராதனை மற்றும் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.