முதல் நாளிலேயே 500 ஓட்டங்களை கடந்த உலகின் முதலாவது அணி இங்கிலாந்து.

பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வரலாற்று சாதனையொன்றை தமதாக்கிக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் – ராவல்பின்டியில் இன்று ஆரம்பமான டெஸ்ட் போட்டியிலேயே, இந்த உலக சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே 500 ஓட்டங்களை கடந்த உலகின் முதலாவது அணியாக வரலாற்றில் இங்கிலாந்து அணி பதிவாகியுள்ளது.

இதன்படி, இன்றைய போட்டி நேர முடிவின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 506 ஓட்டங்களை தமதாக்கிக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில், சாக் க்ரோலி 122 ஓட்டங்களையும், பென் டக்கெட் 107 ஓட்டங்களையும், ஒல்லி போப் 108 ஓட்டங்களையும், ஹாரி புரூக் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர்.

அணியொன்று, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 4 வீரர்கள், சதத்தை பதிவு செய்த முதலாவது சந்தர்ப்பமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.