இலங்கையில் 5G வலையமைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து வெளியான தகவல்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இலங்கையில் 5ஜி (5G) வலையமைப்பை பயன்படுத்துவது குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகொம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசாவின் கருத்துப்படி, 5ஜி நெட்வொர்க்கை (வலைமைப்பை)பயன்படுத்துவதற்கு 4ஜி நெட்வொர்க்கை பயன்படுத்துவதற்கான செலவை விட இரண்டு மடங்கு செலவாகும் என்று கூறியுள்ளார்.

எனவே தற்போது நாடு இருக்கும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்த குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் 2ஜி மற்றும் 4ஜி வலையமைப்புக்கள் பெரிய விஷயமாகப் பேசப்பட்டன. இந்தநிலையில் 5ஜி என்பது அடிப்படையில் 4ஜியின் இன் மற்றொரு மேம்பட்ட பதிப்பாகும். இது நுகர்வோருக்கு அதிக திறனை வழங்குகிறது என்று திருக்குமார் நடராசா மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஸ்மார்ட்போன் ஊடுருவல் அரிதாகவே, அதாவது 50 சதவீதமாகவே உள்ளது. மக்கள் தொகையில் பாதி பேருக்கு 3ஜி போன் கூட இல்லை இந்த நேரத்தில் 5ஜி நெட்வொர்க்(வலையமைப்பு) பயனுள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

5ஜி கைபேசிகள் மிகவும் வரையறுக்கப்பட்ட மற்றும் விலை உயர்ந்தவையாகவும் உள்ளன. எனவே, 5ஜி கைபேசி மற்றும் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய மக்களின் சதவீதமும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.