தீவிரமாய் பரவும் மற்றுமோர் தொற்று நோய்!

தற்போது நாட்டில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

எனினும் எலிக்காய்ச்சல் குறித்த அவதானம் மக்கள் மத்தியில் குறைவாகவே காணப்படுகின்றது.

எலிக்காய்ச்சல் மழையுடனான வானிலை காரணமாக விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நெற்செய்கையில் ஈடுபடும் போது சிறுநீரக நோயாளர்கள் மற்றும் கல்லீரலுடன் தொடர்புடைய நோய் தொற்றுக்குள்ளானவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வயல்களை அண்மித்த பகுதிகளில் துப்பரவு பணிகளில் ஈடுபடும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.