உலக கிண்ணத்தை தனதாக்கிய ஆர்ஜன்டீனா.

𝑰𝑻𝑴 ✍️ 22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

𝑰𝑻𝑴 ✍️ லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸும், முன்னாள் சாம்பியன் ஆர்ஜன்டீனாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

𝑰𝑻𝑴 ✍️ இரண்டு அணிகளும் தலா இரண்டு முறை உலக கிண்ணத்தை வென்று மூன்றாவது முறை உலக கிண்ணத்தை தனதாக்கிக் கொள்ளும் நோக்குடன் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் களமிறங்கின.

𝑰𝑻𝑴 ✍️ போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணியினரும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

𝑰𝑻𝑴 ✍️ போட்டியின் 23 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணிக்கு பெனால்டி கிடைத்தது.

𝑰𝑻𝑴 ✍️ இதனை சரியாக பயன்படுத்திய அணித் தலைவர் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.

𝑰𝑻𝑴 ✍️ இதனையடுத்து போட்டியில் 36 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணி சார்ப்பில் 2 ஆவது கோலை Ángel Di María அடித்தார்.

𝑰𝑻𝑴 ✍️ அதனடிப்படையில் முதல் பாதி முடிவில் 2 - 0 என ஆர்ஜன்டீனா முன்னிலை வகித்தது.

𝑰𝑻𝑴 ✍️ தொடர்ந்து நடைபெற்ற 2 ஆவது பாதியில் இரு அணிகளும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

𝑰𝑻𝑴 ✍️ போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிடைத்தது.

𝑰𝑻𝑴 ✍️ இதனை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ் அணி வீரர் kylian mbappé கோல் அடித்து அசத்தினார்.

𝑰𝑻𝑴 ✍️ இதனையடுத்து விறுவிறுப்பாக சென்ற போட்டியின் 81 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் kylian mbappé மீண்டும் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார்.

𝑰𝑻𝑴 ✍️ அதனடிப்படையில் போட்டியின் 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் 2 - 2 என்ற ரீதியில் சமநிலையில் இருந்தனர்.

𝑰𝑻𝑴 ✍️ இதனையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

𝑰𝑻𝑴 ✍️ இதன்போது போட்டியின் 108 நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணி சார்ப்பில் அணித் தலைவர் மெஸ்ஸி கோல் அடித்தார்.

𝑰𝑻𝑴 ✍️ இதனையடுத்து போட்டியின் 118 நிமிடத்தில் kylian mbappé மீண்டும் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார்.

𝑰𝑻𝑴 ✍️ இதனையடுத்து மேலதிக நேர முடிவில் இரு அணிகளும் 3 - 3 என்ற ரீதியில் சமநிலையில் இருந்ததது.

இதனையடுத்து பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

𝑰𝑻𝑴 ✍️ இதில் 4 - 2 என்ற ரீதியில் ஆர்ஜன்டீனா அணி போட்டியில் வெற்றி பெற்றது.

𝑰𝑻𝑴 ✍️ இம்முறை கால்பந்து உலக கிண்ண தொடரில் 7 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்தமைக்கான கோல்டன் பூட் விருதை kylian mbappé தனதாக்கி கொண்டுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.