சமூக வலைதளங்களுக்கு தடை!

இலங்கை இராணுவத்தினரின் இரகசியத் தகவல்கள், அவதூறு, ஆபாசமான, பாலியல், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுவதற்கு இராணுவத் தலைமையகம் தடை விதித்துள்ளது.

அதன்படி இராணுவ தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எல்.டி. ஹெராத் பிறப்பித்த உத்தரவின் மூலம் அனைத்து இராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பதவிகளுக்கு செயற்படும் அதிகாரிகளுக்கும் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் இராணுவத்தினர் எந்த காரணத்தை கொண்டும் தனது அதிகாரப்பூர்வ அடையாளம் மற்றும் தகவல்களை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதோடு சமூக ஊடக வலைத்தளங்களில் இணைப்புகளைப் பதிவேற்றுவது, பதிவுகளை வெளியிடுவது, பதிவுகளை அனுப்புவது மற்றும் பகிர்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் தகவல்கள், எந்தவொரு நபர் அல்லது அமைப்பு பற்றிய அவதூறான அறிக்கைகள் மற்றும் நாட்டின் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு தகவலையும் பரிமாறிக்கொள்ளவும்  தடைசெய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.