குளிர் காலத்தில் தயிரை உட்கொள்ள கூடாதா?

 

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் அதிக அளவு புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன.

📌உட்கொள்ளும் முறை

தயிரை ரைதா, மோர் போன்ற வடிவில் உட்கொள்கிறோம்.பொதுவாக குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் ஏற்படும் என்று காலம்காலமாக கூறப்பட்டு வருகின்றது அதுமட்டுமல்லாது குறிப்பாக இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது என்றும் கூறப்பட்டு வருகிறது.

தயிர் ஒரு சத்தான உணவாகக் கருதப்படுகிறது. இதில் லாக்டோபாகிலஸ் அசிடோபிலஸ், லாக்டோகாக்கஸ் லாக்டிஸ், லாக்டோகாக்கஸ் லாக்டிஸ் க்ரெமோரிஸ் போன்ற நல்ல பாக்டீரியாக்களும், புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி 2 மற்றும் பி 12 போன்றவையும் நிரம்பியுள்ளது.

குளிர்காலத்தில் தயிரை தவிர்க்க வேண்டிய உணவாக கருதுவது தவறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையாகவே தயிர் குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய ஒரு சரியான உணவு என்று கூறப்படுகிறது.

ஏனெனில் இதில் புரோபயாடிக் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. இவை எந்த காலநிலையிலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.அதேபோல இரவு நேரத்தில் தயிர் ஒரு நல்ல உணவாக இருக்கும், இது மூளையில் டிரிப்டோபான் என்ற தனித்துவமான அமினோ அமிலத்தை வெளியிட உதவுகிறது.

இந்த அமிலம் ஒருவரை அமைதிப்படுத்தவும் மற்றும் தெளிவாக சிந்திக்கவும் செய்ய உதவுகிறது.

பாலூட்டும் தாய்மார்கள் தயிர் சாப்பிடக்கூடாது என்கிற ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கு ஊட்டச் சத்துக்கள் மட்டுமே செல்கிறது அதோடு தாய்ப்பாலில் இம்யூனோகுளோபுலின்கள் நிறைந்திருப்பதால் இது சளி மற்றும் எவ்வித தொற்றையும் ஏற்படுத்தாது.

தயிரில் உள்ள பாக்டீரியா கிருமிகளை எதிர்த்துப் போராடவும், குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

கால்சியம் சத்து மற்றும் நல்ல புரதத்தை பெற பாலூட்டும் தாய்மார்கள் ரைதா அல்லது தயிர் சாதம் உட்கொள்ளலாம். தயிரில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து சுவையான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஸ்னாக்ஸாக மாலை நேரத்தில் சாப்பிடலாம்.

தயிரில் ஓட்ஸ் அல்லது ஏதேனும் தானியத்தை சேர்த்து காலையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக சாப்பிடலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தயிரை தவிர்க்க வேண்டும் என கூறுவது தவறு பொதுவாக தயிரில் நல்ல கொழுப்புகள் உள்ளது.

குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரை உட்கொள்வதால் உடலில் நல்ல கொலஸ்டராலின் அளவு அதிகரிக்கும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.