முதலில் நாம் திருந்த வேண்டும்.

நம்மிடம் உள்ள ஆயிரம் குறைகளை மறைத்து விட்டு மற்றவர்களைத் திருத்த வேண்டும் என்று எண்ணினால் அங்கே மோதல்கள் தான் உண்டாகும்.முதலில் நாம் திருந்த வேண்டும். பிறகு மற்றவர்களைத் திருத்த முற்படுவோம்..     

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான்.

அவனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது.

பல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு அறிஞர் வந்தார், அவருக்கு மருத்துவமும் பார்க்கத் தெரியும்.

அவர் மன்னரை சோதித்து விட்டு அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்கு, கண்களில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.

அந்தக் கண்களை குணப்படுத்த ஒரேயொரு வழி தான்.

அந்த அரசன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் காணக்கூடாது என்று கூறி விட்டுச் சென்றார்.

அரசன் முதலில் தன் வீட்டில் இருக்கும் அனைத்தையும் பச்சையாக மாற்றினான், தலைவலி குணமாகி விட்டது. அந்த அறிஞர் கூறியது சரி தான். உடம்பு சரியாகவே வீட்டை விட்டு வெளியே போகத் தொடங்கினான்.

வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக் கூடாதே...!

நிறையப் பச்சை நிறப் பூச்சுகளையும் தூரிகைகளையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான்.

அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை. அவர்களும் மன்னர் கூறியவாறே செய்து வந்தார்கள்.

சில மாதம் கழித்து மீண்டும் அந்த அறிஞர் அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை நிறம் பூசுவதற்காகப் போனார்கள்.

அவருக்கு வியப்பாகி விட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் அரசனின் கட்டளை இது’ என்று கூறினார்கள், அறிஞர் அதற்கு, “என்னை உங்கள் மன்னரிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்றார்.

மன்னருக்கு தன் நோயினை குணப்படுத்தியவர் மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை வரவேற்று விருந்தோம்பினான்...

“இந்த ஊரில் அனைத்திற்கும் ஏன் பச்சை நிறம் அடிக்கிறீர்கள்...?” என்று அவர் கேட்டார்.

“அய்யா, நீங்கள் கூறியதைத் தான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப் பணிவோடு.

“நான் என்ன சொன்னேன்...?” என்றார் அவர்... 

“பச்சை நிறத்தை விடுத்து வேறெவற்றையும் நான் காணக்கூடாது என்று கூறினீர்களே அய்யா” என்றான்.

அரசே...! நீங்கள் அதற்கு இவ்வளவு பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம், ஒரு பச்சை நிறக் கண்ணாடி வாங்கி அணிந்திருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்குமே...!, உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சை நிறம் பூசவியலுமா...?” என்று கேட்டார் அந்த அறிஞர்...

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் அரசனைப் போலத் தான் பலரும் இன்னும் இப்படித் தான் இருக்கின்றார்கள் 

ஆம் நண்பர்களே...!

உலகில் உள்ளவர்களை திருத்த வேண்டுமானால் முதலில் நாம் திருந்த வேண்டும்...

மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும்...

 உடுமலை சு. தண்டபாணி 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.