அனுபவ அறிவு!

பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு மணமுடிக்க வரன் பார்த்தனர். ஒரு இளைஞனை தேர்வு செய்தனர். அந்தபெண் எல்லோரிலும் சிறந்தவன், உயர்ந்தவனைத்தான் மணந்து கொள்வேன் என கூறிவிட்டாள். அப்படி ஒருவனைத் தேடமுற்பட்டாள். 

அரசன் பல்லக்கில் வர அவனே உயர்ந்தவன் என நினைத்தபோது, 

அரசன் பல்லக்கிலிருந்து இறங்கி அவ்வழிவந்த துறவியை வணங்க, 

துறவியே சிறந்தவன் என நினைத்து அவரைத் தொடர்ந்தாள். 

வழியில் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையாரை துறவி வணங்க, பிள்ளையாரே உயர்ந்தவர் என நினைத்தாள்.

அப்போது அவ்வழி வந்த ஓர் நாய் துறவியை துரத்த பிள்ளையாரை விட தெருநாய் உயர்வா என சிந்திக்க, 

அந்த நாயை ஒரு சிறுவன் கல்லெடுத்து அடிக்க, அச்சிறுவன் சிறந்தவனா என யோசிக்கும் போது, 

‘நாயை ஏன் அடித்தாய்’ என ஓர் இளைஞன் அச்சிறுவனை மிரட்ட, சிறுவன், ‘இனிமேல் இது போன்று செய்ய மாட்டேன்’ எனக்கூறி ஓட, அந்த இளைஞனே சிறந்தவன் என முடிவு கொண்டாள்.

அரசன்- துறவி- பிள்ளையார்- நாய்- சிறுவன்- இளஞன் என முடிவு கொள்ள ஓர் ஆராய்ச்சி அனுபம் அவளுக்கு கிடைத்தது.

அவளின் பெற்றோரிடம் அந்த இளைஞனை மணந்து கொள்வதாகக் கூறினாள்.

பெற்றோர்கள் தங்கள் அனுபவதால் அந்த இளஞனைத்தான் அவளுக்கு மணமகனாக முன்பே தெரிவு செய்திருந்தினர். 

ஆக அனுபவத்தின் முடிவு ஒன்றாகவே இருக்க வாய்புண்டு. 

அனுபவ அறிவின் கூற்றுகளை செவி கொடுத்து கேட்டு செயல் படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.

┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈ 

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

 நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.