பண்டிகை காலத்தில் மரக்கறி விலை உச்சத்தை அடையும்!

எதிர்வரும் பண்டிகை காலத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் உச்சத்தை அடையும் என பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார்.

தற்போது தேவைக்கு ஏற்ப சந்தைப்படுத்துவதற்கு மரக்கறி உற்பத்தி போதுமானதாக இல்லை எனவும் நாட்டின் விவசாயத்துறையை ஆட்சியாளர்கள் நாசமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது உள்நாட்டு உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், கரட், போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளும் கடுமையாக விலையுயர்ந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.