சிந்திப்பவர்கள் சிறகடிக்கிறார்கள்.

நம் சிந்தனையின் எதிரொலியாக செயலின் வடிவமாக சாதனையின் அடையாளமாக இருக்கிறோம்.

சிந்தனையில் இருந்து தான் அறிவு தோன்றுகிறது. அது பண்பட்ட பல கேள்விகளை எழுப்பி விடை காண வைக்கும்.

ஏன்...?, எதற்கு...?, எப்படி...? என்ற வினாவை எழுப்பி அறிவைப் பயனுறச் செய்யும்.

சிந்தனை இல்லாவிட்டால் உலகத்தில் இயங்குகின்ற சக்தியே இருக்காது. சிந்தனையின் மூலமே முன்னேற்றம் காண முடியும்.

ஏதேனும் ஒன்றைப் பற்றி தொடர்ந்து எண்ணிக் கொண்டு இருப்பதும், ஆராய்ந்துக் கொண்டு இருப்பதும் தான் சிந்தனை.

இதன் மூலம் தான் எந்தச் செயலையும் செய்ய முடியும். சிந்தனை தான் நமது வாழ்வின் அடிப்படை உணர்வு.

நாம் பட்டறியும் இன்பங்கள் எல்லாம் மனிதர்களுடைய சிந்தனையிலிருந்து பிறந்தது தான், அவர்களுடைய சிந்தனையே செயலாக மாறி கண்டுபிடிப்புகளாகத் தோன்றின.

ஒரு சிறுவன் பெற்றோருடன் நிலை மேடையில் (மேசையில்) உணவு உட்கொண்டிருந்தான். கொதிநீர் கொதித்து கொண்டிருந்த கெட்டிலின் மூடி படபடவென ஆடியது.

மற்றவர்களுக்கு அது சாதாரண நிகழ்வு. ஆனால் அவனுக்கோ சிந்தனையில் பொறி தட்டியது, உள்ளிருக்கும் நீராவி தான் இதற்குக் காரணம் என அறிந்தான். ஆராய்ந்தான்; அறிவித்தான்...!

உலகமே வியக்கும் வண்ணம் நீராவி இயந்திரங்கள் உருவாயின. அந்தச் சிறுவன் தான் சேம்ஸ்வாட்...!

புதிய வாழ்க்கைக்கு பயன்படும் கருவிகளைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் இப்படி ஆக்கப்பூர்வமாக சிந்திப்பவர்களே...!

நாம் மூச்சு விடுவதால் மட்டும் வாழவில்லை சிந்திப்பதால் வாழ்கிறோம். செயல்படுவதால் வாழ்கிறோம்.

ரஷ்யத் தலைவர் லெனின் காலமான போது,ஒரு செய்தி நிறுவனம் இப்படி அறிவித்தது.

'லெனின், ''தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்று'

ஆம் நண்பர்களே.. !

சிந்தனைகளில் இருந்தே கருத்துக்கள் பெறப்படுகின்றன. இவற்றால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடையலாம்...

வாழ்வில் வெற்றி அடையலாம். தேர்வில் சாதனை படைக்கலாம். இலக்கியத்தின் எல்லையைத் தொடலாம். எல்லாவற்றிற்கும் தேவையானது ஆழ்ந்த சிந்தனை...!

சிந்திப்பவர்கள் சிறகடிக்கிறார்கள். சிகரங்களைத் தொடுகிறார்கள்...!

உடுமலை சு.தண்டபாணி 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.