இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் நீதிமன்றில் கருத்து.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு அரசாணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுவில் விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முஹமட் லாபர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இலங்கை கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான தொழில்நுட்பக் குழுவொன்றை ஆலோசிக்கவுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

புதிய கிரிக்கெட் அரசியலமைப்பை உருவாக்குவதுடன் விளையாட்டுச் சட்டம் மற்றும் அது தொடர்பான விளையாட்டு விதிமுறைகள் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த மனுவை பிப்ரவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.