கிராம உத்தியோகத்தர்களுக்கு கட்டாய இடமாற்றம்.

 

𝑰𝑻𝑴 ✍️ கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றில் 05 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ அதன்படி மாவட்ட மற்றும் அமைச்சுக்களின் மேல்முறையீட்டு வாரியங்களில் இடமாற்றம் செய்யப்படாததற்கு சிறப்புக் காரணங்களைக் கொண்ட அலுவலர்களைத் தவிர, 5 வருட சேவையை பூர்த்தி செய்த ஏனைய அனைத்து கிராம உத்தியோகத்தர்களையும் இடமாற்றம் செய்வது கட்டாயம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

𝑰𝑻𝑴 ✍️ எவ்வாறாயினும், அடுத்த வருடம் 31 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் வருடாந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்படாத உத்தியோகத்தர்கள் இன்னும் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருந்தால் அவர்களுக்கு இடமாற்ற உத்தரவு வழங்குமாறும் அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.