எக்கச்சக்கமான நன்மைகள் ஒளிந்துள்ள நீர்!

நம் சமையலறையில் உள்ள மசாலாப் பொருட்களில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

அஜீரணக் கோளாறு, உடல் எடை குறைப்பு, இருமல், சளி போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளை சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டு சரிசெய்யலாம்.

உடல்நலப் பிரச்னைகளை சரிசெய்யும்

வீட்டுப் பொருட்களை வைத்து உடல்நலப் பிரச்னைகளை சரிசெய்யும் போக்கு பெண்களிடையே அதிகம் உள்ளது.

வயிற்றுப் பிரச்னை

அந்தவகையில் அடிக்கடி வயிற்றுப் பிரச்னை மற்றும் செரிமானக் கோளாறு ஏற்படுபவர்கள் தினசரி தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

அதில் ஒரு ஸ்பூன் ஓமம் போட்டு குடித்தால் முடி உதிர்தல், எடை அதிகரிப்பு, பி.சி.ஓ.எஸ் பிரச்னைகள் குறையத் தொடங்கும்.

குறிப்பாக இரவு முழுவதும் ஓமத்தை ஊறவைத்து, அடுத்தநாள் குடிப்பது பல்வேறு பலன்களை வழங்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடல் எடையை குறைக்க

ஓரிரு நாட்களில் உடல் எடையை குறைப்பது என்பது மிக மிக கடினம். ஆனால் ஓமம் கலந்த நீரை தொடர்ந்து குடித்து வருவது, உடல் எடை குறைப்புக்கான பயணத்துக்கு பெரும் நலனை சேர்க்கும்.

எடை குறைப்புக்கான முயற்சிகளை துவங்கும் போது, ஒருசில உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதற்கு ஓம நீரை பருகுவது உறுதுணையாக இருக்கும்.

வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த

வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த ஓம நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுடைய செரிமான செயல்முறையை துரிதப்படுத்துவது மட்டுமில்லாமல், அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

இவ்வாறு வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம், மலச்சிக்கல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது குறைகின்றன.

அரிப்பு மற்றும் கொப்புளங்கள்

உங்களுக்கு தோலழற்சி இருந்து, கொப்பளங்கள் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னை இருந்தால், ஓமம் பேஸ்டை பாதிக்கப்பட்ட இடங்களில் பூசலாம்.

அதற்கு ஒரு ஸ்பூன் ஓமத்தை சுடு தண்ணீரில் இரவு முழுக்க ஊறவைத்து அரைத்துவிட வேண்டும். அதை அடுத்தநாள் இரவு தூங்குவதற்கு முன்பு எடுத்து தோல் பாதிப்பு உள்ள இடங்களில் பூசிவிட்டு தூங்க வேண்டும்.

அதை அடுத்தநாள் காலையில் குளிக்கும் போது சூடான நீரில் கழுவிக்கொள்ளலாம்.

குடல் ஆரோக்கியம்

இரைப்பை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஓம தண்ணீர் பல்வேறு நலன்களை வழங்குகிறது. வயிற்றில் வலி ஏற்படுவது, அடிக்கடி தோல் பிடிப்பு ஏற்படுவது உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கிவிடும்.

இந்த ஓம தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், உங்களுடைய குடலில் உள்ள என்சைமள் சிறப்பாக செயல்படத் துவங்கும்.

இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும் மற்றும் வாயு பிரச்னை உடனடியாக நீங்கிவிடும்.

சுவாச பிரச்சனைகள்

ஓம நீர் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் தெய்வீக மருந்து என்றே சொல்லலாம். இது சுவாசப் பகுதிகளில் இருக்கும் காற்றுப் பாதைகளை தளர்த்துவதற்கு உதவுகிறது.

இதன்மூலம் நுரையீறல் மற்றும் குரல்வளைகள் சுத்தமாக இருக்கும். குறட்டை, மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் அடிக்கடிக்கடி ஓம நீரை குடித்து வருவது நல்ல பலனை வழங்கும்.    

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.