முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

 

முட்டை விலை குறைவடைந்தால், பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையினை குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், கருத்துரைத்த என்.கே ஜயவர்தன, தற்போது முட்டையொன்று 60 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முட்டைகள் வெதுப்பகத்துறைக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் தற்போது முட்டை விலை அதிகரிப்பினால் வெதுப்பக உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 இதனால் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. எனவே முட்டை விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வெதுப்பக உற்பத்திகளையும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜவர்தன தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.