இலங்கையின் மற்றுமொரு இராணுவ அதிகாரிக்கு தடை விதித்த அமெரிக்கா!

இலங்கையில் உள்ள மற்றுமொரு இராணுவ அதிகாரி மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

உலகளாவிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் சமீபத்திய நடவடிக்கையாக இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைவர் மேஜர் பிரபாத் புலத்வத்த மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு, இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தது. 2020 ஆம் ஆண்டில், முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் படைகளின் பிரதானியான ஜெனரல் சவேந்திர சில்வா மீதும் அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.