வெள்ளத்தில் மூழ்கிய கண்டி தொடருந்து நிலையம்.

கனமழை காரணமாக கண்டி தொடருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தொடருந்து பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பிலிமத்தலாவை மற்றும் பேராதனை தொடருந்து நிலையங்கள் இடையில் அமைந்துள்ள நானுஓயா தொடருந்து கடவைக்கு அருகில் மண் மேடு சரிந்துள்ளதன் காரணமாக மலையக தொடர்ந்து சேவைக்கு தடையேற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து கண்டி வரை செல்லும் தொடருந்து பிலித்தலாவை வரை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கண்டி மற்றும் மய்யாவ தொடருந்து நிலையத்திற்கு இடையில் தொடருந்து பாதையிலும் மண் மேடு சரிந்துள்ளது.

அதேவேளை  நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை தொடருந்து நிலையத்தில் இருந்து முற்பகல் 10.15 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் நோக்கி புறப்படவிருந்த தொடருந்து மற்றும் கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 12.40 நானு ஓயா நோக்கி புறப்படவிருந்த தொடருந்து என்பன இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்தள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.