மாண்டஸ் புயலால் பல விமானங்கள் ரத்து!

மாண்டஸ் புயல் கரையைக் கடப்பதை அடுத்து, கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானம் உட்பட மூன்று சர்வதேச விமானங்களும், 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் மண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் தூத்துக்குடி, கடப்பா, மைசூர், பெங்களூரு, மதுரை, விஜயவாடா, மங்களூரு, காலிகட், ஹூப்ளி, கண்ணூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களும் நிறுத்தப்பட்டன.

அதோடு சில விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை விமான நிலையக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை விமான நிலையத்திற்கு அருகாமையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் உணர்திறன் கருவிகள் வெள்ளத்தில் மூழ்குவதைத் தவிர்க்க, அடையாறு ஆற்றின் நீர் ஓட்டம் ஒரு மணிநேர அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶    No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.