அபார வெற்றி பெற்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி!

 

𝑰𝑻𝑴 ✍️ LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் நேற்று இடம்பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

𝑰𝑻𝑴 ✍️ அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை பெற்றது.

𝑰𝑻𝑴 ✍️ அவ்வணி சார்பில் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் அதிகபட்சமாக 41 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

𝑰𝑻𝑴 ✍️ பந்து வீச்சில் சாமிக்க கருணாரத்ன 4 விக்கெட்டுக்களையும், ஓஷேன் தோமஸ் மூன்று விக்கெட்டுக்களையும் மற்றும் இசுரு உதான இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

𝑰𝑻𝑴 ✍️ அதன்படி, 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி ஃபால்கன்ஸ் அணி 16 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

𝑰𝑻𝑴 ✍️ அவ்வணி சார்பில் கமிந்து மெந்திஸ் 51 ஒட்டங்களையும் என்ரூ பிளட்சர் 44 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.