ரயிலிலுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து

𝑰𝑻𝑴 ✍️ கொழும்பிலிருந்து சிலாபத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இரவு ரயிலிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இதில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 9:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ ரயில்வே கடவையின் தடுப்புப் பலகை போடப்பட்டிருந்த நிலையிலும் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்த நிலையிலும் பழைய சிலாபம் வீதி திசையை நோக்கி முச்சக்கர வண்டி பயணித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இதன்போது கொச்சிக்கடை திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இந்த விபத்து காரணமாக முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ரயில்வே கடவையின் தடுப்பு பலகையும் சேதமடைந்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் நீர்கொழும்பு பெரியமுல்லை, அபேசிங்கபுர ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 19 வயது இளைஞர்கள் ஆவர்.

𝑰𝑻𝑴 ✍️ காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

𝑰𝑻𝑴 ✍️ பின்னர் இவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

𝑰𝑻𝑴 ✍️ முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர்களின் கவனயீனமே இதற்கு பிரதான காரணம் என்ன சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

𝑰𝑻𝑴 ✍️ இந்த சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.