பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சின் புதிய அறிவிப்பு.

இந்தாண்டு இரண்டாம் தவணை மற்றும் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

அதன்படி, முதற்கட்டமாக பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திததி முதல் ஜனவரி 1ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இரண்டாம் கட்டமாக ஜனவரி 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்.

ஜனவரி 21 ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் பாடசாலை மூடப்படும் என்றும், க.பொ.த சாதாரணதர பரீட்சை காரணமாக பெப்ரவரி 19 ஆம் திகதி வரை மூடப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் கட்டத்தின் கீழ், பெப்ரவரி 20ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.