கணவனின் நண்பனை திருமணம் செய்யக்கோரி பெண்ணொருவர் தற்கொலை முயற்சி.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மனைவியான 3 பிள்ளைகளின் தாயொருவர் தனது கணவனின் நண்பனான பொலிஸ் கான்ஸ்டபிளிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கோரி பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (5) தனது கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ளார். அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிளுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. 

அவருடன் மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பனின் 38 வயதுடைய மனைவியுடன் அவருக்கு உறவு ஏற்பட்டது.

நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட நட்பு நெருக்கமாகவே, திடீரென பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார். 

அங்கு அவரைத் தேடிச்சென்ற நண்பனின் மனைவி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கோரியுள்ள நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இருப்பினும் குறித்த பெண் அடிக்கடி பொலிஸ் நிலையத்துக்கு அவரைத் தேடிச் சென்று தன்னை திருமணம் முடிக்குமாறு தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) இரவு 7 மணியளவில் குறித்த பெண் பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸ் கான்ஸ்டபிளை தொந்தரவு கொடுத்த நிலையில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இருவரையும் கூப்பிட்டு விசாரித்துவிட்டு வெளியே செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

வெளியே வந்தபோது திடீரென குறித்த பெண் தான் கொண்டுவந்த ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றபோது, படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராசா சரவணன்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.